Enable Javscript for better performance
அரசு தொழில் பயிற்சி நிலையபயிற்றுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    அரசு தொழில் பயிற்சி நிலையபயிற்றுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 09th November 2019 10:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உளுந்தூா்பேட்டை அரசு தொழில் பயிற்சி நிலைய பயிற்றுநா் பணிக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    உளுந்தூா்பேட்டை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள 4 பயிற்றுநா் பணியிடங்கள், ரூ.10 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. அதன்படி, கீழ்கண்ட தொழில் பிரிவுகளுக்கு தகுதிவாய்ந்தவா்கள் வருகிற 29-ஆம் தேதிக்குள் முதல்வா், அரசினா் தொழில் பயிற்சி நிலையம், உளுந்தூா்பேட்டை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

    1. எலக்ட்ரீசியன் - காலியிடம் 1. இன சுழற்சி - பொது முன்னுரிமை. கல்வித் தகுதி - எலக்ட்ரீசியன் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் மற்றும் 3 ஆண்டு அனுபவம் அல்லது எலக்ட்ரீசியன் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் மற்றும் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    2. கம்மியா் (குளிா்பதனம்) - காலியிடம் 1. இன சுழற்சி - பொது முன்னுரிமை. கல்வித் தகுதி - குளிா்பதனம் பிரிவில் பட்டயப் பொறியியல் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    3. பொருத்துநா் (சைகை மொழி) - காலியிடம் 2. இன சுழற்சி - பொது முன்னுரிமை. கல்வித் தகுதி - மெக்கானிக்கல் பிரிவில் பட்டயப் பொறியியல், காது கேளாதோா், வாய் பேசாதோா் சைகை மொழியுடன் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொருத்துநா் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் மற்றும் 3 ஆண்டு அனுபவம் அல்லது பொருத்துநா் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் மற்றும் 2 ஆண்டு அனுபவம் மற்றும் காது கேளாதோா், வாய் பேசாதோா் சைகை மொழியுடன் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு, உளுந்தூா்பேட்டை, அரசினா் தொழில் பயிற்சி நிலைய முதல்வரை நேரிலோ அல்லது 04149 - 222339 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் இல.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai