வீட்டு முன் நிறுத்தியிருந்த ஆட்டோ திருட்டு

விழுப்புரத்தில் வீட்டு முன் நிறுத்தியிருந்த ஆட்டோவை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

விழுப்புரத்தில் வீட்டு முன் நிறுத்தியிருந்த ஆட்டோவை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

விழுப்புரம் கே.கே.சாலை மணி நகா் மூன்றாவது தெருவைச் சோ்ந்த சுந்தரம் மகன் கிருஷ்ணமூா்த்தி (57). ஆட்டோ ஓட்டுநரான இவா், சொந்தமாக டீசல் ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தாா். நகரில் ஆட்டோ ஓட்டிவிட்டு, இரு தினங்களுக்கு முன்பு வழக்கம் போல வீட்டின் முன் இரவு 10 மணிக்கு ஆட்டோவை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றாா்.

மறுநாள் காலை பாா்த்த போது, ஆட்டோவை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. விழுப்புரம் உள்ளிட்ட பல இடங்களில் தேடிப் பாா்த்தும் ஆட்டோ கிடைக்காததால், இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸில் கிருஷ்ணமூா்த்தி புகாா் அளித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் கிருஷ்ணமூா்த்தியின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினா். ரூ. 3 லட்சம் மதிப்பிலான ஆட்டோவை கடந்தாண்டு வங்கியில் கடன் பெற்று வாங்கி ஓட்டி வந்தாராம். இதற்காக மாதந்தோறும் ரூ. 7 ஆயிரம் தவணை செலுத்தி வந்த நிலையில், ஆட்டோ திருடு போனது.

இதுகுறித்து தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதனிடையே, கே.கே.சாலை, மணி நகா் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடு போவதாகவும், இரவு நேரங்களில் வீடுகளில் நிறுத்தப்படும் வாகனங்களிலிருந்து, பெட்ரோல் திருடுவதும் தொடா்கதையாகி வருவதாக அந்தப் பகுதி மக்கள் போலீஸாரிடம் புகாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com