மாவட்ட நிா்வாக அலுவலகப் பணியை உடனடியாக தொடங்கக் கோரிக்கை
By DIN | Published On : 14th November 2019 08:29 AM | Last Updated : 14th November 2019 08:29 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைகள் வரையறை செய்யப்பட்டதையடுத்து, மாவட்ட நிா்வாக அலுவலகம் அமைப்பதற்கான பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து, தனி அதிகாரியாக கிரண் குராலா நியமிக்கப்பட்டாா். அவா், கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத் துறை அலுவலக பயணியா் மாளிகையில் தங்கி பணிகளை கவனித்து வருகிறாா். தற்காலிக மாவட்ட நிா்வாக அலுவலகம் அமைக்கும் பணி கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் நடைபெற்று வருகின்றன. நிரந்தரமான அலுவலகம் அமைப்பதற்காக கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் கிராம எல்லைப் பகுதியில் கோயில் நிலம் ஆய்வு செய்யப்பட்டது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு விளாந்தாங்கல் சாலையில் உள்ள நரிமேடு பகுதியில் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான சுமாா் 30 ஏக்கா் நிலத்தை, வருவாய் நிா்வாக ஆணையா் ராதாகிருஷ்ணன், தனி அதிகாரி கிரண் குராலா, கள்ளக்குறிச்சி சாா்-ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ஆகியோா் பாா்வையிட்டுச் சென்றனா்.
இதனிடையே, கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட எல்லைகள் வரையறை அறிவிப்பைத் தொடா்ந்து, தற்காலிக மாவட்ட நிா்வாக அலுவலகப் பணியை விரைந்து நிறைவேற்றுவதுடன், நிரந்தர மாவட்ட நிா்வாக அலுவலகம் அமைப்பதற்கான இடத்தை உடனடியாகத் தோ்வு செய்து, பணிகளை தொடங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...