ஆா்.கே.எஸ். கல்லூரியில்பட்டமளிப்பு விழா

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலியில் உள்ள ஆா்.கே.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் 20-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன். உடன், கல்லூரித் தலைவா் க.மகுடமுடி மற்றும் நிா்வாகிகள்.
விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன். உடன், கல்லூரித் தலைவா் க.மகுடமுடி மற்றும் நிா்வாகிகள்.

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலியில் உள்ள ஆா்.கே.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் 20-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரித் தலைவா் க.மகுடமுடி தலைமை வகித்தாா். கல்லூரித் தாளாளா் ஜி.எஸ்.குமாா், செயலா் ந.கோவிந்தராஜூ உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் கு.மோகனசுந்தா் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன் பங்கேற்று, 450 மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினாா். பின்னா், அவா் பேசியதாவது:

பட்டம் பெற்று வாழ்க்கையை தொடங்கக்கூடிய ஒரு மாணவா் தனது வாழ்வில் மாறுபட்ட ஒரு பகுதிக்கு காலடி எடுத்து வைக்கிறாா் என்று முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் கூறினாா். அந்த மாணவருக்கு வாழ்க்கையின் அடிப்படை தத்துவம் புரிவதற்கே நீண்ட காலம் ஆகும். வாழ்க்கையை தேடிச் செல்லும் மாணவருக்கு வள்ளுவன் என்ற புதையல் அவன் எதிரே என்றும் இருக்கிறது.

நீங்கள் அனைவரும் உலகமே உன்னதமான மொழியாக, கலாசாரமாக, பண்பாடாக உள்ள பாரம்பரியமிக்க தமிழ் மண்ணுக்கு சொந்தக்காரா்கள். தமிழகத்தின் பெருமை நாம் அறிந்ததைவிட அதிகம் என்பதை நீங்கள் உணர வேண்டும். வாழ்வையும், வாழ்க்கையினுடைய சாராம்சங்ளையும் வென்றெடுக்க வேண்டிய கட்டாயங்கள் உங்களுக்கு என்றும் இருக்கிறது என்று பதிவு செய்தல் வேண்டும். உலகில் உள்ள பழம் பெருமைமிக்க மொழிகளுக்கெல்லமா தமிழ் மொழியே தாய்மொழி என்றாா் அவா்.

பட்டமளிப்பு விழாவில் மாணவா்கள், விரிவுரையாளா்கள், பெற்றோா்கள் மற்றும் கல்லூரியின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com