குடுகுடுப்பை அடித்து வாக்கு சேகரித்த திமுக பிரமுகர்!
By DIN | Published On : 09th October 2019 10:34 AM | Last Updated : 09th October 2019 10:34 AM | அ+அ அ- |

இடைத் தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் கோவிந்தன் குடுகுடுப்பைக்காரர் வேடமிட்டு நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலையொட்டி, மக்களின் வாக்குகளைப் பெற பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக தலைமைக் கழக பேச்சாளரான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தன் குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து, விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட காணையில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார். அவர் தனி நபராக வீடு, வீடாகச் சென்று குடுகுடுப்பை அடித்து திமுக ஆட்சியின் முந்தைய சாதனைகளைக் கூறி, கட்சி வேட்பாளர் நா.புகழேந்திக்கு ஆதரவாக வாக்கு கேட்டது அந்தப் பகுதி மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G