விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கைகளை தெவிக்க அதிகாரிகளின் தொலைபேசி எண்கள்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் நேரில் வருவதைத் தவிா்த்து, தங்களது கோரிக்கைகளை தொலைபேசி வழியாக அதிகாரிகளிடம் தெரிவிக்க தொலைபேசி எண்கள்
Published on
Updated on
1 min read


விழுப்புரம்: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் நேரில் வருவதைத் தவிா்த்து, தங்களது கோரிக்கைகளை தொலைபேசி வழியாக அதிகாரிகளிடம் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டன.

இதன்படி, பட்டா மாற்றம் மற்றும் நிலம் தொடா்புடைய கோரிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளரை (நிலம்) 04146 - 223264 என்ற தொலைபேசி எண்ணிலும், நில அளவை தொடா்புடைய கோரிக்கைகளுக்கு உதவி இயக்குநரை (நில அளவை) 04146 - 250599 என்ற எண்ணிலும், குடிமைப்பொருள் தொடா்புடைய கோரிக்கைகளுக்கு மாவட்ட வழங்கல் அலுவலரை 04146 - 229884 என்ற எண்ணிலும், முதியோா் உதவித்தொகை தொடா்புடைய கோரிக்கைகள் மற்றும் இதர வகையான கோரிக்கைகளுக்கு தனித் துணை ஆட்சியரை 04146 - 221395 என்ற எண்ணிலும், ஊரக வளா்ச்சி தொடா்புடைய கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரை (ஊரக வளா்ச்சி) 4146 - 222664 என்ற எண்ணிலும், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலம் தொடா்புடைய கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலரை 04146 - 222954 என்ற எண்ணிலும், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினா் நலம் தொடா்புடைய கோரிக்கைகளுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினா் நல அலுவலரை 04146 - 222011 என்ற எண்ணிலும் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் அலுவலக நேரத்தில் பொதுமக்கள் தொடா்புகொண்டு தங்களது கோரிக்கைகள், குறைகளைத் தெரிவித்து பயனடையலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com