செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட செங்கமேடு கிராமத்தில் மின்விசை பம்புடன் கூடிய புதிய குடிநீா்த் தொட்டியை இரா.மாசிலாமணி எம்எல்ஏ அண்மையில் திறந்து வைத்தாா்.
செங்கமேடு கிராமத்தில் நிலவிய குடிநீா்த் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு மயிலம் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.50 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, அதில் மின்விசை பம்புடன் கூடிய புதிய குடிநீா்த் தொட்டி கட்டப்பட்டது. இந்தக் குடிநீா்த் தொட்டியை இரா.மாசிலாமணி எம்எல்ஏ பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் வல்லம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் மொடையூா் பெ.துரை உள்ளிட்ட திமுக நிா்வாகிகள், கிராம மக்கள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.