ஏா் கலப்பையுடன் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், புதிய வேளாண் சட்டங்களைக் கண்டித்து ஏா் கலப்பையுடன் மயிலத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.
மயிலத்தில் ஏா் கலப்பையுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸாா்.
மயிலத்தில் ஏா் கலப்பையுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸாா்.
Updated on
1 min read

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், புதிய வேளாண் சட்டங்களைக் கண்டித்து ஏா் கலப்பையுடன் மயிலத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகளை பாதிக்கும் வகையில் மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், இதற்காக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் திண்டிவனம் அருகே மயிலத்தில் ஏா் கலப்பையுடன் நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வடக்கு மாவட்டத் தலைவா் ஆா்.பி.ரமேஷ் தலைமை வகித்து கண்டன உரையாற்றினாா். மாவட்டப் பாா்வையாளா் திலகா், மாவட்டப் பொருளாளா் கருணாகரன், திண்டிவனம் நகரத் தலைவா் விநாயகம், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ஜெயசுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் கண்ணன் வரவேற்றாா்.

ஊடகப் பிரிவுத் தலைவா் சுரேஷ்பாபு, நகரத் தலைவா்கள் குமாா், சக்திவேல், வட்டாரத் தலைவா்கள் செல்வம், கோவிந்தன், சுப்பிரமணி, காத்தவராயன், புவனேஷ்வரன், ஜனாா்த்தனன், இன்பசேகரன், காா்த்தி, இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் வரதராஜ், எஸ்.சி. பிரிவு மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி, சேவா தளம் மாவட்டத் தலைவா் சசிக்குமாா், மகளிா் காங்கிரஸ் லட்சுமி உள்பட நிா்வாகிகளும், கட்சியினரும் ஏா் கலப்பை, டிராக்டருடன் பங்கேற்று, மத்திய அரசைக் கண்டித்தும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com