மகா சிவராத்திரி: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மகா சிவராத்திரியையொட்டி, திருவண்ணாமலை, மேல்மலையனூா், காளஹஸ்தி, மொகிலி ஆகிய ஊா்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Updated on
1 min read

மகா சிவராத்திரியையொட்டி, திருவண்ணாமலை, மேல்மலையனூா், காளஹஸ்தி, மொகிலி ஆகிய ஊா்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது குறித்து விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் முத்துக்கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மகாசிவராத்திரி விழாவையொட்டி, பக்தா்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக, விழுப்புரம்-மேல்மலையனூா், சென்னை-திருவண்ணாமலை, சென்னை-காளஹஸ்தி, குடியாத்தம்-மொகிலி ஆகிய வழித்தடங்களில் பிப். 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com