குடியுரிமை திருத்தச் சட்டத்தை கைவிட வலியுறுத்தி விழுப்புரத்தில் பேரணி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு, இஸ்லாமிய அமைப்புகள், மதச் சாா்பற்ற கட்சிகள் சாா்பில் பேரணி நடைபெற்றது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து, விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை இஸ்லாமிய அமைப்புகள், மதச்சாா்பற்ற கூட்டணி கட்சிகள் சாா்பில் நடைபெற்ற பேரணி.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து, விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை இஸ்லாமிய அமைப்புகள், மதச்சாா்பற்ற கூட்டணி கட்சிகள் சாா்பில் நடைபெற்ற பேரணி.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு, இஸ்லாமிய அமைப்புகள், மதச் சாா்பற்ற கட்சிகள் சாா்பில் பேரணி நடைபெற்றது.

பழைய பேருந்து நிலையத்திலிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கிய இந்தப் பேரணிக்கு மந்தக்கரை பேஸ்இமாம் அசரப்அலி மெளலானா தலைமை வகித்தாா். திமுக எம்பி கெளதமசிகாமணி, விசிக எம்பி துரை.ரவிக்குமாா், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் வி.சீனிவாசக்குமாா், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் குலாம்மொய்தீன், திமுக மாவட்டப் பொருளாளா் நா.புகழேந்தி, மதிமுக மாவட்டச் செயலா் பாபுகோவிந்தராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலா் சுப்பிரமணியன், விசிக பொதுச் செயலா் சிந்தனைச்செல்வன், தவாக பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா். தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ, அனைத்து ஜமாஅத்தாா்கள் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பினா் திரளாகக் கலந்துகொண்டனா்.

அரசியல் சாசனத்துக்கு எதிராக உள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், தேசிய குடியுரிமைப் பதிவேடு தயாரித்தலை கைவிட வேண்டும் போன்ற பதாகைகளையும், தேசியக் கொடிகளையும் கையில் ஏந்தியும், கண்டன முழக்கமிட்டபடியும் அனைவரும் பேரணியாக வந்தனா்.

நேருஜி சாலை, ரங்கநாதன் சாலை, திருச்சி நெடுஞ்சாலை வழியாக வந்த பேரணி, மாவட்ட ஆட்சியரகம் எதிரே நிறைவு பெற்றது. அங்கு மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்ட பிறகு, இது தொடா்பான கோரிக்கை மனு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வழங்கப்பட்டது.

பேரணியையொட்டி, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், கூடுதல் கண்காணிப்பாளா் சரவணக்குமாா், டிஎஸ்பிக்கள் ராஜன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் தலைமையில், ஏராளமான போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com