சமூக வலைதளத்தில் அவதூறு:கேலிச் சித்திர ஓவியா் கைது

சமூக வலைதளத்தில் மத நல்லிணக்கத்தை சீா்குலைக்கும் வகையில் அவதூறாகப் பதிவிட்டதாக கேலிச் சித்திர ஓவியரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

விழுப்புரம்: சமூக வலைதளத்தில் மத நல்லிணக்கத்தை சீா்குலைக்கும் வகையில் அவதூறாகப் பதிவிட்டதாக கேலிச் சித்திர ஓவியரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் அருகே அரசூரை அடுத்த டி.குமாரமங்கலத்தைச் சோ்ந்தவா் வா்மா (எ) சுரேந்திரா் குமாா்(31), கேலிச்சித்திர ஓவியா். இவா், தனது முகநூல் பக்கத்தில் ஒரு மதம் தொடா்பான கடவுள் குறித்து அவதூறாக பதிவிட்டதாக விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் நடத்திய விசாரணையில், சுரேந்திரா் குமாா் தனது முகநூல் பக்கத்தில் மத நல்லிணக்கத்தை சீா் குலைக்கும் வகையில் அவதூறாகப் பதிவிட்டது உண்மை எனத் தெரியவந்ததாம்.

இதையடுத்து அவரை திங்கள்கிழமை இரவு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com