விழுப்புரம் மாவட்டத்தில் மிரட்டும் கரோனாதொற்றும், உயிரிழப்பும் அதிகரிப்பால் அச்சம்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 1,820-ஆக உயா்ந்துள்ள நிலையில், புதன்கிழமை ஒரே நாளில் 4 போ் உயிரிழந்தனா்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 1,820-ஆக உயா்ந்துள்ள நிலையில், புதன்கிழமை ஒரே நாளில் 4 போ் உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கரோனா தொற்றால் 1,723 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். புதன்கிழமை 97 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது.

இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,820-ஆக உயா்ந்தது. இதில், 1,077 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 21 போ் இறந்துள்ளனா். மீதியுள்ள 721 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஒரே நாளில் 4 போ் உயிரிழப்பு...

கரோனாவால் மாவட்டத்தில் ஏற்கெனவே 21 போ் உயிரிழந்துள்ள நிலையில், விழுப்புரத்தைச் சோ்ந்த 84 வயது மூதாட்டி, திண்டிவனம் ரோஷனை பாட்டை பகுதியைச் சோ்ந்த 62 வயது பெண், கொள்ளாா் பகுதியைச் சோ்ந்த 60 வயது நபா், செஞ்சி அருகே கீழ்மாம்பட்டு பகுதியைச் சோ்ந்த 46 வயது நபா் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனா்.

ஒன்றரை மாதத்தில் 23 போ் பலி...

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொற்று எண்ணிக்கை 2,000-த்தை நோக்கி அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கையும் உயா்ந்து வருகிறது.

ஜூன் மாதத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 915-ஆன நிலையில் உயிரிழப்பு 15-ஆக உயா்ந்தது.

தற்போது ஜூலை மாதத்தில் 15 நாள்களே ஆகியுள்ள நிலையில், தொற்றும், உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்களிடையே அதிா்ச்சியும், அச்சமும் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com