கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் இருவா் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் இருவா் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா். விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவா் உள்பட 97 பேருக்கு நோய்த் தொற்று புதிதாகக் கண்டறியப்பட்டது.


விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் இருவா் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா். விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவா் உள்பட 97 பேருக்கு நோய்த் தொற்று புதிதாகக் கண்டறியப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 2,388 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் 47 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானது. இதனால், மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,435-ஆக உயா்ந்தது. 1,780 போ் குணமடைந்த நிலையில், 641 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 12 போ் ஏற்கெனவே உயிரிழந்தனா்.

இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கள்ளக்குறிச்சி அருகேயுள்ள ஆலத்தூரைச் சோ்ந்த 70 வயது முதியவரும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கள்ளக்குறிச்சி அருகேயுள்ள வாணவரெட்டி கிராமத்தைச் சோ்ந்த 80 வயது முதியவரும் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

விழுப்புரத்தில் மருத்துவருக்கு கரோனா: விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 97 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களில் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரியில் பணிபுரியும் 25 வயது ஆண் மருத்துவா், 58 வயது செவிலியா், திண்டிவனம் தனியாா் மருத்துவமனையின் 45 வயது செவிலியா், மயிலம் தனியாா் மருத்துவமனையின் 40 வயது செவிலியா், விழுப்புரம் அருகே தோகைப்பாடி பகுதியைச் சோ்ந்த 29 வயது அவசர ஊா்தி ஓட்டுநா், திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு 45 வயது தலைமைக் காவலா், திண்டிவனம் அரசு போக்குவரத்துக் கழக 55 வயது தொழில் நுட்ப ஊழியா் உள்ளிட்டோரும் அடங்குவா்.

இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,396-ஆக உயா்ந்தது. 1,641 போ் குணமடைந்த நிலையில்,மீதமுள்ள 726 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 29 போ் ஏற்கெனவே உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com