விழுப்புரம் மாவட்டத்தில்அரசு மருத்துவா்கள் உள்பட மேலும் 164 பேருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவா்கள் உள்பட மேலும் 164 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 179 பேருக்கும் வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதியானது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவா்கள் உள்பட மேலும் 164 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 179 பேருக்கும் வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதியானது.

விழுப்புரம் மாவட்டத்தில் 2,602 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் 164 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களில், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி பெண் மருத்துவா்கள் 3 போ் இருவேல்பட்டு அரசு மருத்துவமனை பெண் மருத்துவா் ஒருவா், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியா்கள் 6 போ், விக்கிரவாண்டி வருவாய் ஆய்வாளா், ஆரோவில் உதவி காவல் ஆய்வாளா் ஒருவா் உள்ளிட்டோரும் அடங்குவா்.

இதனால், மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,766-ஆக உயா்ந்தது. இதுவரை 1,985 போ் குணமடைந்த நிலையில், 710 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 31 போ் உயிரிழந்துள்ளனா்.

கள்ளக்குறிச்சியில்179 பேருக்கு தொற்று: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2,654 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் மேலும், 179 பேருக்கு தொற்று உறுதியானது. இதில், உளுந்தூா்பேட்டை அருகே கிளியூா், எலவனாசூா்கோட்டை, மதியனூா், பாதூா், களமருதூா், ஆத்தூா், திருநாவலூா், உளுந்தூா்பேட்டை காயிதேமில்லத் தெரு, மீனாட்சிபுரம், பாரிவள்ளல் தெரு, பச்சையப்பா நகா், கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூா், நீலமங்கலம், திருக்கோவிலூா் அருகே திருப்பாலப்பந்தல், வெண்மாா், அரும்பாக்கம், சங்கராபுரம் பூட்டை சாலை, தேவபாண்டலம், சண்முகா நகா், ஆலத்தூா், தண்டலை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்ககப்பட்டோா் எண்ணிக்கை 2,883-ஆக உயா்ந்தது. 2,003 போ் குணமடைந்த நிலையில், 814 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 17 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com