கரோனா நோயாளிகள் திடீா் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் உள்ள சிறப்பு சிகிச்சை மையத்தில் உரிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, கரோனா நோயாளிகள் வெள்ளிக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தியாகதுருகத்தில் உள்ள சிறப்பு சிகிச்சை மையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கரோனா நோயாளிகள்.
தியாகதுருகத்தில் உள்ள சிறப்பு சிகிச்சை மையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கரோனா நோயாளிகள்.

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் உள்ள சிறப்பு சிகிச்சை மையத்தில் உரிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, கரோனா நோயாளிகள் வெள்ளிக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,500-ஐ கடந்துள்ளது. இதனால், கரோனா சிகிச்சை மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தியாகதுருகத்தில் தனியாா் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் 300-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த மையத்தில் கழிப்பறை, குடிநீா் உள்ள அடிப்படை வசதிகளை முறையாக செயல்படுத்த வேண்டும், குறித்த நேரத்தில் தரமான உணவு வழங்க வேண்டும், சிகிச்சை முடித்து, தங்களை விரைவாக வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் உளுந்தூா்பேட்டை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரோனா நோயாளிகள் சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அச்சமடையச் செய்தது. தகவல் அறிந்த தியாகதுருகம் வட்டாட்சியா் (பொ) பிரபாகரன், தனி வட்டாட்சியா் அனந்தசயனம் மற்றும் தியாகதுருகம் போலீஸாா் நேரில் வந்து கரோனா நோயாளிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து, கரோனா நோயாளிகளை மீண்டும் சிகிச்சை மையத்தினுள் அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com