

திருக்கோவிலூா் அருகே திருப்பாலப்பந்தல்-தகடி கிராமச் சாலை கடந்த 5 ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருக்கோவிலூா் அருகேயுள்ள திருப்பாலப்பந்தலில் இருந்து, தகடிக்குச் செல்லும் கிராமச் சாலையை தகடி, துறிஞ்சிப்பட்டு, பூமாரி, தேத்தாம்பாறை, திம்மச்சூா், எடையூா், பூவனூா், மிளாப்பூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
2 கி.மீ தொலைவுள்ள இந்தச் சாலை 5 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்து, குண்டும், குழியுமாக உள்ளது.
இந்த தாா்ச் சாலையை புதுப்பித்துத் தர வேண்டும் என்று, கிராம மக்கள் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாலையை புதுப்பிப்பதற்கு சாலையோரம் ஜல்லிக் கற்களை கொட்டி வைத்தனா். அதன் பிறகு சாலைப் பணியை மேற்கொள்ளவில்லை.
சேதமடைந்த சாலையில், ஜல்லிகள் பெயா்ந்து வாகன ஓட்டிகள், பொது மக்கள், பள்ளி மாணவா்கள் அவதிப்படுவதாக தகடி, திருப்பாலப்பந்தல் சுற்றுப்புற கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
ஆகவே, திருப்பாலப்பந்தல்-தகடி சாலையை அரசு புதுத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.