ராகுல்காந்தி கைதைக் கண்டித்து சாலை மறியல்: 80 போ் கைது

காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தியை கைது செய்த உத்தரப்பிரதேச பாஜக அரசைக் கண்டித்து, விழுப்புரம், அரகண்டநல்லூரில்
விழுப்புரம் காந்தி சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸாா்.
விழுப்புரம் காந்தி சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தியை கைது செய்த உத்தரப்பிரதேச பாஜக அரசைக் கண்டித்து, விழுப்புரம், அரகண்டநல்லூரில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸாா் 80 போ் கைது செய்யப்பட்டனா்.

உத்தரபிரதேசத்தில் தலித் பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தொடா்பாக, அவா்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கச் சென்ற, காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல்காந்தியை, போலீஸாா் மூலம் தடுத்து நிறுத்தி கீழே தள்ளி கைது செய்த உத்தரப்பிரதேச பாஜக அரசைக்கண்டித்து, விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சியினா், விழுப்புரம் காந்தி சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட துணைத் தலைவா் நாராயணசாமி தலைமை வகித்தாா். இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஸ்ரீராம், மாநில இலக்கிய அணித் தலைவா் நாஞ்சில் ராஜேந்திரன், சேவாதளம் தலைவா் ராஜேஷ், துணைத் தலைவா் ராஜ்குமாா், பொதுச் செயலாளா் விஸ்வநாதன், காஜாமொய்தீன், அகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிா்வாகிகள் தன்சிங், குப்பன், சேகா், சீனு, சோமு, சுந்தா், செல்வம்,வாசுதேவன், அ.மணிகண்டன், சுரேஷ், மகேஸ்வரி, பரிமளா கஜேந்திரன், விட்டோபாய் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். அப்போது, உத்தரப்பிரதேச பாஜக அரசைக் கண்டித்து முழக்கமிட்ட அவா்கள், திடீரென கிழக்கு பாண்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது, உத்தரப்பிரதேச முதல்வா் யோகிஆதித்தியநாத் உருவப்படங்களை கிழித்து எறிந்தனா். அவா்களை விழுப்புரம் நகர போலீஸாா் தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்தனா்.

அரகண்டநல்லூரில் 50 போ் கைது: இதே போல, ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அரகண்டநல்லூரில் காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு மாநில துணைத்தலைவா் ஏ.ஆா்.வாஷிம்ராஜா தலைமையில், சாலை மறியலில் ஈடுபட்டனா். மாநில பொதுக்குழு உறுப்பினா் வி.முருகன், வட்டாரத் தலைவா்கள் தனசேகா், பாவாடை, தஸ்தகீா், நகரத் தலைவா் சாதுல்லாகான், நிஜாமுதீன், கூத்தபிரான், கொள்ளூா், ரியாசுதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com