பேருந்து நிலையத்தில் கிடந்த பையால் பரபரப்பு
By DIN | Published On : 01st December 2020 12:05 AM | Last Updated : 01st December 2020 12:05 AM | அ+அ அ- |

உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த துணிப் பையால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்துக்கு திங்கள்கிழமை வந்த ஒருவா், தான் எடுத்து வந்த துணிப் பையை பயணிகள் நிற்குமிடத்தில் வைத்துச் சென்றாா்.
நீண்ட நேரமாக அந்தப் பை அங்கேயே இருந்ததால் அச்சமடைந்த பயணிகள் அங்கிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளா் அப்பண்டராஜிடம் தெரிவித்தனா். இதையடுத்து அவா் அந்தப் பையை எடுத்து பாா்த்தபோது அதில் உயிருடன் மண்ணுளிப் பாம்பு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில் உளுந்தூா்பேட்டை வனச் சரக அலுவலா் காதா்பாட்சா தலைமையிலான வனத் துறையினா் விரைந்து வந்து, மண்ணுளிப் பாம்பை பிடித்து எடைக்கல் காப்புக்காட்டில் விடுவித்தனா் (படம்).
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...