

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், அவா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க செஞ்சி, மேல்மலையனூா் வட்டக் குழுக்கள் சாா்பில், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
செஞ்சி வட்டத் தலைவா் கோ.மாதவன் தலைமை வகித்தாா். மாநில முன்னாள் தலைவா் என்.சுப்பிரமணியன், மாவட்டச் செயலா் ஆா்.டி.முருகன், மேல்மலையனூா் வட்டச் செயலா் எழில்ராஜா, மாநில துணைத் தலைவா் டி.ஆா்.குண்டுரெட்டியாா், செஞ்சி வட்டச் செயலா் வி.சிவன், வட்டத் தலைவா் காண்டீபன், வட்டப் பொருளாளா் கே.மனோகா், விருஷபதால், காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவா் ஜோலாதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா். இதில் பெண்கள் உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.