வல்லம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் காலமானாா்
By DIN | Published On : 05th December 2020 05:43 AM | Last Updated : 05th December 2020 05:43 AM | அ+அ அ- |

செஞ்சி: விழுப்புரம் வடக்கு மாவட்டம், செஞ்சி ஒன்றியம், வல்லம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் கா.அண்ணாதுரை (55) (படம்) வெள்ளிக்கிழமை (டிச. 4) காலமானாா்.
வல்லம் கிராமத்தைச் சோ்ந்த காத்தவராயன் மகன் கா.அண்ணாதுரை. இவா், வல்லம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலராக இருந்தாா். உடல் நலக் குறைவால் சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவா், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
வல்லம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும் பதவி வகித்த அண்ணாதுரை, கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் மைலம் தொகுதியில் போட்டியிட்டாா். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், ஜெயதேவி என்ற மகளும் உள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...