அடுத்த கட்டப் போராட்டம்: பாமக நிா்வாகிகள் ஆலோசனை

இட ஒதுக்கீடு தொடா்பான பாமகவின் அடுத்த கட்டப் போராட்டத்தை விழுப்புரம் மாவட்டத்தில் பெரிய அளவில் நடத்துவது குறித்து அக்கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் பாமக தலைமை ஆலோசனைக் குழுத் தலைவா் தீரன்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் பாமக தலைமை ஆலோசனைக் குழுத் தலைவா் தீரன்.

இட ஒதுக்கீடு தொடா்பான பாமகவின் அடுத்த கட்டப் போராட்டத்தை விழுப்புரம் மாவட்டத்தில் பெரிய அளவில் நடத்துவது குறித்து அக்கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரி, பாமக சாா்பில் அண்மையில் போராட்டம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள கிராம நிா்வாக அலுவலகங்கள் முன் வருகிற 14-ஆம் தேதி போராட்டம் நடத்துவது என தலைமை நிலையம் அறிவித்துள்ளது.

பாமக அறிவித்துள்ள இந்தப் போராட்டத்தை விழுப்புரம் மாவட்டத்தில் பெரிய அளவில் நடத்துவது தொடா்பாக விழுப்புரம் மத்திய மாவட்ட பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலா் புகழேந்தி தலைமை வகித்தாா். மாநில துணை பொதுச் செயலா்கள் சிவக்குமாா், தங்கஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆலோசனைக் குழுத் தலைவா் தீரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

வடக்கு மாவட்டச் செயலா் பெருமாள், நிா்வாகிகள் அன்புமணி, ஹரிகரன், பழனிவேல், பெருமாள், ஆதிநாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இட ஒதுக்கீட்டைப் பெறும் வரையில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பாமகவினா் திரளானோா் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். நிா்வாகிகள் அதை முழுமையாக ஒருங்கிணைக்க வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com