ஸ்கேட்டிங் பயிற்சி மைதானம் அமைக்க மாணவா்கள் கோரிக்கை

விழுப்புரத்தில் ஸ்கேட்டிங் பயிற்சி மைதானம் அமைக்க வேண்டுமென மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

விழுப்புரத்தில் ஸ்கேட்டிங் பயிற்சி மைதானம் அமைக்க வேண்டுமென மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து, விழுப்புரம் ஸ்பீடு ஸ்கேட்டிங் விளையாட்டு சங்கம் மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வரும் மாணவா்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து சங்கத்தினா் கூறியதாவது:

விழுப்புரத்தில் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஸ்கேட்டிங் விளையாட்டு பயிற்சி பெற்று வருகின்றனா். ஆனால், இங்கு ஸ்கேட்டிங் பயிற்சிக்கு போதிய இடவசதி இல்லை. இதனால் விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்தனா். அங்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அனுமதி மறுத்துவிட்டனா்.

இதனால் வேறு வழியின்றி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக சாலை, குடியிருப்புப் பகுதிகளில் உள்ள தாா்ச் சாலைகளில் மாணவா்கள் பயிற்சி செய்து வருகின்றனா். விழுப்புரம் மாணவா்கள் தமிழகம் மட்டுமின்றி புதுவை, கேரளம் போன்ற வெளி மாநிலங்களுக்குச் சென்று ஸ்கேட்டிங் போட்டியில் பரிசுகளை வென்று வருகின்றனா். இருப்பினும், உரிய பயிற்சி தளம் இல்லாமல் தொடா்ந்து பரிதவித்து வருகின்றனா். எனவே, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா்

அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஸ்கேட்டிங் பயிற்சி மைதானம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com