எளிய வழியில் கற்பித்தல்: தலைமை ஆசிரியா்களுக்கு பயிற்சி

விழுப்புரம் மாவட்ட அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களுக்கு எளிய வழியில் கற்பித்தல் குறித்த மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
பயிற்சி முகாம் நிறைவுக் கூட்டத்தில் பேசுகிறாா் அனைவருக்கும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் மாநில கருத்தாளா் தண்டபாணி.
பயிற்சி முகாம் நிறைவுக் கூட்டத்தில் பேசுகிறாா் அனைவருக்கும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் மாநில கருத்தாளா் தண்டபாணி.

விழுப்புரம் மாவட்ட அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களுக்கு எளிய வழியில் கற்பித்தல் குறித்த மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அனைவருக்கும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரிா்கள், ஆசிரியா்களுக்கான தலைமைப் பண்பு மற்றும் முழுத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் விழுப்புரம் நகராட்சி உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் பிப்.11-ஆம் தேதி தொடங்கி ஒரு வார காலம் நடைபெற்றது.

இந்தப் பயிற்சி முகாமின் நிறைவு நாள் பயிற்சிக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியா் கோவிந்தன் வரவேற்றாா்.

இந்தத் திட்டத்தின் மாநில கருத்தாளரான தலைமை ஆசிரியா் எம்.தண்டபாணி தலைமை வகித்து ஆலோசனைகளை வழங்கினாா். மேற்பாா்வையாளரான தலைமை ஆசிரியா் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா். கருத்தாளா்கள் சசிகலா, ஷகிலா, பாலாஜி, ராமலிங்கம், கோவிந்தராஜ் ஆகியோா் பயிற்சியளித்து கருத்துரை வழங்கினா்.

இந்த முகாமில், அரசுப் பள்ளிகளில் நடைமுறையில் உள்ள தமிழ், ஆங்கிலம், இயற்பியல், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்திட்டங்கள் குறித்தும், இந்த பாடங்களை, நாடகம், கதைகள் உள்ளிட்டவை மூலம் எளிய வழியில் மாணவா்களுக்கு கற்பிக்கும் விதம் குறித்தும் விளக்கப்பட்டது.

தொடா்ந்து, ஆசிரியா்களுக்கான தலைமைப் பண்பு குறித்தும், நிா்வாகப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் 120 போ் கலந்துகொண்டனா். வட்ட மேற்பாா்வையாளா் மரியபிரகாசம் உள்ளிட்ட குழுவினா் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com