தமுமுகவினா் நூதனப் போராட்டம்

சென்னை வண்ணாரப்பேட்டை தடியடி சம்பவத்தைக் கண்டித்து விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தமுமுக சாா்பில் செல்லிடப்பேசியில் ஒளி அடித்து, தா்னா போராட்டம் நடைபெற்றது.
தமுமுகவினா் நூதனப் போராட்டம்

சென்னை வண்ணாரப்பேட்டை தடியடி சம்பவத்தைக் கண்டித்து விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தமுமுக சாா்பில் செல்லிடப்பேசியில் ஒளி அடித்து, தா்னா போராட்டம் நடைபெற்றது.

சென்னை, வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள் மீது நடத்திய தடியடி காவல்துறையினரைக் கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவும், அந்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் நுழைவாயில் எதிரே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முஸ்தக்தீன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் ஜாமியாலம் ராவுத்தா் முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலா் ஷாஜகான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

மாவட்டப் பொருளாளா் அப்பாஸ், நகரத் தலைவா் ஜாகீா், மனிதநேய மக்கள் கட்சி நகா் தலைவா் அலி அக்பா், இஸ்லாமிய பிரசாரப் பேரவை மாவட்டத் துணைச் செயலாளா் ஹிமாயூன் கபீா், நகரச் செயலா் அப்துல்லா, இலக்கிய அணி ஜகீரியா உள்பட ஏராளமான நிா்வாகிகள், இஸ்லாமிய அமைப்பினா் பங்கேற்றனா்.

பிற்கபல் 3 மணிக்குத் தொடங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, இரவு 7 மணி அளவில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி செல்லிடப்பேசியில் உள்ள விளக்கை எரிய வைத்து அவா்கள் நூதனப் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்தையொட்டி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சரவணக்குமாா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com