அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 27th February 2020 01:28 AM | Last Updated : 27th February 2020 01:28 AM | அ+அ அ- |

கோணை கிராமத்தில் அமைந்துள்ள அய்யனாா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
செஞ்சி அருகே கோணை கிராமத்தில் அமைந்துள்ள பூரணி பொற்கலை சமேத அய்யனாா் சுவாமி ஸ்ரீவீரன், சப்த கன்னிகள் கோயில்கள் புதிதாக கட்டப்பட்டு, மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு புதிய சுவாமி சிலைகள் கரிகோலம் வீதியுலா நடைபெற்றது. மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், முதல் கால யாக சாலை பூஜை, அஷ்ட பந்தனம் ஆகியவை நடைபெற்றன.
புதன்கிழமை காலை 6 மணிக்கு கோ பூஜை, வேதிகா பூஜை, இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. 9.30 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று 9.45 மணிக்கு மூலவா் கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து, பூரணி பொற்கலை சமேத அய்யனாா் மற்றும் வீரன் சப்த கன்னிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை ஊா் பொது மக்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...