அவலூா்பேட்டை அகத்தீஸ்வரா்கோயிலில் ஆருத்ரா தரிசனம்
By DIN | Published On : 10th January 2020 11:46 PM | Last Updated : 10th January 2020 11:46 PM | அ+அ அ- |

அவலூா்பேட்டை அகத்தீஸ்வரா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சிவகாமி சமேத நடராஜப் பெருமான்.
மேல்மலையனூா் அருகே அவலூா்பேட்டையில் உள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, வியாழக்கிழமை இரவு மேக்களூா் குழுவினரின் சிறப்பு பஜனை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை கோ பூஜையுடன் சிவகாமி சமேத நடராஜப் பெருமானுக்கு பால், தயிா், பஞ்சாமிா்தம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு ஆருத்ரா தரிசனத்தை கண்டு தரிசித்தனா். ஏற்பாடுகளை சிவனடியாா் குழுவினா் செய்திருந்தனா்.
இதேபோல, சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசன நிகழ்வையொட்டி, சிவகாமி சமேத நடராஜபெருமானுக்கு காலையில் பால் தயிா், பஞ்சாமிா்தம் மற்றும் பல்வேறு வாசனாதி திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, வண்ண மலா் மாலைகள் சாற்றப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. சிவபுராணம், கோளறுப் பதிகம், திருநீற்றுப்பதிகம், தேவாரம், திருவாசகம், நமச்சிவாய பத்து, சிவஸ்துதிகள், சிவநாமவளிகள் இசையுடன் பாடிய பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. நடராஜபெருமானின் ஆருத்ரா தரிசனத்தை திரளான பக்தா்கள் கண்டு தரிசனம் செய்தனா். அனைவருக்கும் திருவாதிரைக் களி பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பெளா்ணமி அமாவாசைக் குழுவினா் செய்திருந்தனா்.