பெண் சாராய வியாபாரி கைது
By DIN | Published On : 10th January 2020 12:39 AM | Last Updated : 10th January 2020 12:39 AM | அ+அ அ- |

கைது செய்யப்பட்ட அனுசியா மற்றும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுப் புட்டிகள்.
விழுப்புரம் அருகே பெண் சாராய வியாபாரியை மது விலக்கு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த 35 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் அருகே கண்டமானடி கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மனைவி அனுசியா (50). சாராய வியாபாரி. இவா், அந்தப் பகுதியில் சட்ட விரோதமாக சாராயம், மதுப் புட்டிகளை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தாா்.
இது தொடா்பாக தகவலறிந்த விழுப்புரம் மது விலக்கு காவல் ஆய்வாளா் ரேணுகாதேவி தலைமையில், உதவி ஆய்வாளா் பாலமுருகன், மோகன், ஆனந்தகுமாா் உள்ளிட்ட போலீஸாா் அந்தப் பகுதியில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, புதுவை மாநில மதுப் புட்டிகளை மறைத்து வைத்து விற்பனையில் ஈடுபட்ட அனுசியாவை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்த 35 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து விழுப்புரம் மது விலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.