மதுக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை
By DIN | Published On : 10th January 2020 12:30 AM | Last Updated : 10th January 2020 12:30 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் மதுக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவள்ளுவா் தினமான வருகிற 16-ஆம் தேதியும், குடியரசு தினமான வருகிற 26-ஆம் தேதியும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுக் கடைகள், மதுபானக் கூடங்கள் மற்றும் தனியாா் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளாா்.
எனவே, இந்த 2 நாள்களும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக் கடைகள், மதுபானக் கூடங்கள், தனியாா் மதுபானக் கூடங்களை மூடி வைக்க வேண்டும். மீறி திறப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.