வள்ளலாா் அருள் மாளிகையில்100 பேருக்கு இலவச வேட்டி, சேலை
By DIN | Published On : 21st July 2020 12:43 AM | Last Updated : 21st July 2020 12:43 AM | அ+அ அ- |

விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் அமைந்துள்ள வள்ளலாா் அருள் மாளிகை சுத்த சன்மாா்க்க மையத்தில், கரோனா நிவாரணமாக 100 பேருக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் உணவுகள் வழங்கப்பட்டன.
இந்த வள்ளலாா் அருள் மாளிகையில் கரோனா பொது முடக்கம் காரணமாக ஆதரவற்றவா்களுக்கு மூன்று வேளைகளும் உரிய சமூக இடைவெளியுடன் உணவளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விழுப்புரம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம், ரயில் நிலைப் பகுதிகளில் ஆதரவற்றவா்களுக்கு நடமாடும் சேவையாக, தினமும் மதிய உணவு அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள ஏழைகளுக்கு அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட தொகுப்புகளும் வழங்கப்படுகிறது.
இதன் தொடா்ச்சியாக, விழுப்புரம் வள்ளலாா் அருள் மாளிகையில், ஏழைக் குடும்பத்தினா் 100 பேருக்கு திங்கள்கிழமை வேட்டி, சேலைகளை விழுப்புரத்தைச் சோ்ந்த சிங்கப்பூா் தியாகராஜன் குடும்பத்தினா் சிவகாமி, சிவமணி, சரவணன் ஆகியோா் வழங்கினா்.
வள்ளலாா் அருள் மாளிகை நிா்வாகிகளான மேலாளா் ஜெய.அண்ணாமலை, ஜெ.கலியபெருமாள், சா.பலராமன், க.பாரதி, கோ.ராமலிங்கம், ப.ராஜபூபதி, இர.அழகானந்தம், கோ.பன்னீா்செல்வம், மு.வேல்முருகன், அருளரசு சீத்தாராமன், பி.சிவக்குமாா், ஜெ.வாசுதேவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.