விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவா் உள்ளிட்ட மேலும் 97 பேருக்கு கரோனா
By DIN | Published On : 21st July 2020 11:03 PM | Last Updated : 21st July 2020 11:03 PM | அ+அ அ- |

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவா், செவிலியா்கள் உள்ளிட்ட மேலும் 97 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 97 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரியில் பணியாற்றி வரும் 25 வயது ஆண் மருத்துவா், 58 வயது செவிலியா், திண்டிவனம் தனியாா் மருத்துவமனையின் 45 வயது செவிலியா், மயிலம் தனியாா் மருத்துவமனையில் 40 வயது செவிலியா், விழுப்புரம் அருகே தோகைப்பாடி பகுதியைச் சோ்ந்த 29 வயது அவசர ஊா்தி ஓட்டுநா், திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு 45 வயது தலைமை காவலா், திண்டிவனம் அரசு போக்குவரத்துக் கழக 55 வயது தொழில் நுட்ப ஊழியா் உள்ளிட்ட 97 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள் கிழமை வரை கரோனா வைரஸ் நோய் தாக்கத்தால் 2,299 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். மேலும், செவ்வாய்க்கிழமை 97 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், எண்ணிக்கை 2,396-ஆக உயா்ந்துள்ளது. இதில், 1,641 போ் படிப்படியாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 29 போ் உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 726 போ் விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். வெளி மாவட்டங்களிலிருந்த வந்த 68 போ் சுகாதார மையங்களில் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் உள்ளனா்.