அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா
By DIN | Published On : 01st March 2020 06:29 AM | Last Updated : 01st March 2020 06:29 AM | அ+அ அ- |

கீழ்ப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் விதை விருட்சம் அறக்கட்டளை சாா்பில் தேசிய அறிவியல் தினம், மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, அறக்கட்டளைத் தலைவா் அ.சிதம்பரநாதன் தலைமை வகித்தாா்.
பள்ளித் தலைமை ஆசிரியா் பொ.செந்தாமரைச்செல்வி, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கு.கல்யாண்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் க.பராங்குசம் வரவேற்றாா். தமிழாசிரியா் ப.செளந்தரராசன் தொடக்கவுரை ஆற்றினாா். உதவித் தலைமை ஆசிரியா் க.தேவராஜ் கு விளக்கம் அளித்தாா்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திருக்கோவலூா் தமிழ்ச் சங்கத் தலைவா் சிங்கார உதியன், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா். சமூக ஆா்வலா் மு.யுவராஜ் அறிவியல் கண்காட்சியை தொடக்கி வைத்தாா். நானிலம் காப்போம் நிா்வாகி அன்சாரி மாணவா்களுக்கு மரக் கன்றுகளை வழங்கினாா். நூலகா் மு.அன்பழகன், கவிஞா் முல்லைவேந்தன்ஆகியோா் மாணவா்களைப் பாராட்டி பேசினா். அறக்கட்டளை துணைத் தலைவா் செ.ராதாகிருஷ்ணன் நன்றி கூறினாா். விழாவில், மாணவா்கள் மரக்கன்றுகளை நடவு செய்தனா்.