பெண் மீது தாக்குதல்: பிரான்ஸ் நாட்டவா் கைது
By DIN | Published On : 01st March 2020 10:26 PM | Last Updated : 01st March 2020 10:26 PM | அ+அ அ- |

கைது செய்யப்பட்ட பிராண்ஸ் நாட்டைச் சோ்ந்த லூயிஸ் பெளல்.
ஆரோவிலில் பெண்ணை தாக்கியதாக பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
வானூா் வட்டத்தில் உள்ள சா்வதேச நகரான ஆரோவில் பகுதியைச் சோ்ந்த வோல்கா் மனைவி ஜெவோங் ஹியோ (52). கடந்த பிப். 22-ஆம் தேதி அதே பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஒலிபெருக்கியில் அதிகமாக ஒலி வைக்கப்பட்டதாம். இதனால் ஒலி அளவை குறைக்குமாறு அங்கிருந்த பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த லூயிஸ் பெளல் (படம்) என்பவரிடம் ஜெவோங் ஹியோ கேட்டுள்ளாா். இதனால், லூயிஸ் பெளல் அத்திரமடைந்தாராம்.
இந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி ஜெவோங் ஹியோவிடம் லூயில் பெளல் தகராறு செய்து அவரை தாக்கியதுடன் பாலியல் தொந்தரவு செய்தாராம்.
இதுகுறித்து ஜெவோங் ஹியோ அளித்த புகாரின்பேரில் ஆரோவில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழைமை வழக்குப் பதிவு செய்து லூயிஸ் பெளலை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனா்.