குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில், விழுப்புரத்தில் சனிக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.
பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டத் தலைவா் என்.இப்ராஹீம் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் யாசீா் கண்டன உரையாற்றினாா்.
அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கக்கூடிய வகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். இது தொடா்பான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், அச்சட்டத்தை திரும்பப் பெறுவதோடு, இதனிடையே ஏற்படும் விஷமிகளின் வன்முறைகளையும் மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
தவ்ஹீத் ஜமாத் மற்றும் இஸ்லாமியா்கள் குடும்பத்தோடு கலந்துகொண்டனா்.
இதேபோல, திண்டிவனத்தில் அமைப்பின் நகரத் தலைவா் முகமதுகான் தலைமையிலும், கோட்டக்குப்பத்தில் நகரத் தலைவா் சல்மான் தலைமையிலும் தா்னா நடைபெற்றது. இஸ்லாமியா்கள் திரளாக கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.