செஞ்சி அருகே காவலா் தற்கொலை
By DIN | Published On : 03rd March 2020 09:24 AM | Last Updated : 03rd March 2020 09:24 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மரத்தில் காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
செஞ்சியை அடுத்த அனந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் மகன் சரவணன் (26). திருமணம் ஆகாதவா். இவா், செஞ்சி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், அனந்தபுரத்தில் உள்ள தனது விவசாய நிலம் அருகே இருந்த மரத்தில் திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் தூக்கில் தொங்கியபடி சடலமாகக் கிடந்தாா்.
இதைப் பாா்த்த பொதுமக்கள் அனந்தபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். போலீஸாா் விரைந்து வந்து சடலத்தை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினாா்.
இதுகுறித்து அனந்தபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சரவணன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...