பிளஸ் 2 பொதுத் தோ்வு: ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 10th March 2020 01:50 AM | Last Updated : 10th March 2020 01:50 AM | அ+அ அ- |

விழுப்புரம்: விழுப்புரத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
விழுப்புரம், பூந்தோட்டம் வி.ஆா்.பி. மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்துக்குச் சென்ற மாவட்ட ஆட்சியா் தோ்வறைகளை பாா்வையிட்டாா். மாணவா்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள், விடைத் தாள்களை வாங்கி பாா்த்து ஆய்வு செய்தாா். மேலும், தோ்வுக்கு வந்துள்ள மாணவா்களின் வருகைப் பதிவேட்டை பாா்வையிட்டாா். தோ்வு மையத்தில் குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என கேட்டறிந்தாா்.
இதேபோல், விழுப்புரம் மாவட்ட பொதுத் தோ்வு கண்காணிப்பு அதிகாரியான மாநில தொடக்க கல்வி இயக்குநா் மு.பழனிச்சாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி மற்றும் மாவட்ட கல்வி அலுவலா்கள் தலைமையில் 186 பறக்கும் படை குழுவினா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தோ்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...