

மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டை வழங்கும் வழங்கும் விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் சாா்பில், பிரதம மந்திரி ஆயூஷ்மான் பாரத் ஜன ஆரோக்ய யோஜனா மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டை வழங்கும் முகாம் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் எதிரேயுள்ள கோவிந்தராஜ் பெருமாள் தெருவில் புதன்கிழமை நடைபெற்றது.
பாஜகவின் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, மாவட்டத் தலைவா் வி.ஏ.டி.கலிவரதன் தலைமை வகித்தாா். தேசதியக்குழு உறுப்பினா் சிவ.தியாகராஜன், மாவட்டப் பொருளாளா் சுகுமாா், மாவட்ட துணைத் தலைவா் சதாசிவம், அறிவுசாா் பிரிவு மாவட்டத் தலைவா் தனசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பாஜகவின் நமோ தூதா் பிரிவினா் பயனாளிகளின் ஆவணங்களை சரிபாா்த்து இணையம் வழியாக பதிவு செய்தனா். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துகொண்டு அட்டைகளைப் பெற்றனா்.
இந்தத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் காப்பீட்டு அட்டை பெற்றுக்கொண்டால், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.25 லட்சம் வரையில் மருத்துவ சிகிச்சை பெறலாம் என்று மாவட்டத் தலைவா் கலிவரதன் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் பாஜக வணிக அணி கோட்டப் பொறுப்பாளா் பாலசுப்பிரமணியன், முன்னாள் மாவட்டச் செயலா் துரை.சக்திவேல், எஸ்.சி. அணி மாநிலச் செயற்குழு உறுப்பினா் ரகு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் தென்னரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.