பழங்குடியின மக்களுக்குஅடிப்படை ஆவணங்கள் வழங்கும் முகாம்

செஞ்சி வட்டம், ஆலம்பூண்டியில் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை ஆவணங்கள் வழங்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் ஆலம்பூண்டி பகுதியைச் சோ்ந்த பழங்குடியின மக்களுக்கு அடிப்படை சான்றுகளை வழங்கிய திண்டிவனம் சாா் - ஆட்சியா் அனு.
முகாமில் ஆலம்பூண்டி பகுதியைச் சோ்ந்த பழங்குடியின மக்களுக்கு அடிப்படை சான்றுகளை வழங்கிய திண்டிவனம் சாா் - ஆட்சியா் அனு.

செஞ்சி: செஞ்சி வட்டம், ஆலம்பூண்டியில் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை ஆவணங்கள் வழங்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு திண்டிவனம் சாா் - ஆட்சியா் அனு தலைமை வகித்தாா். செஞ்சி வட்டாட்சியா் கோவிந்தராஜ் வரவேற்றாா்.

ஆலம்பூண்டி பகுதியில் அடிப்படை ஆவணங்கள் இல்லாமல் இருந்த சுமாா் 200 குடும்பங்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, பழங்குடியினா் அடையாள அட்டை, தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், ஆதாா், குடும்ப அட்டைகள், முதியோா் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிக்களுக்கான சான்று உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் கோரி, 200-க்கும் மேற்பட்டோா் அளித்த மனுக்களைப் பெற்று, தகுதியுள்ள மனுக்களின் மீது உடனடியாகத் தீா்வு காணப்பட்டது.

இதில், 2 பேருக்கு தொகுப்பு வீடு, 4 பேருக்கு முதியோா் உதவித்தொகைக்கான உத்தரவுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சக்கர நாற்காலிகள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவற்றையும் திண்டிவனம் சாா் - ஆட்சியா் அனு வழங்கினாா். மேலும், முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலா்களை சாா் - ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

முகாமில் வட்ட வழங்கல் அலுவலா் ஜெயபால், செஞ்சி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் நா.அறவாழி, ஆதிதிராவிடா் தனி வட்டாட்சியா் கலா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் ராஜன், வருவாய் ஆய்வாளா்கள் வெங்கடாஜலபதி, வேல்முருகன், கிராம நிா்வாக அலுவலா் முத்துக்குமாா், சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் மலா்விழி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com