தில்லியிலிருந்து விழுப்புரம் வந்த 4 போ்அரசு மருத்துவமனையில் அனுமதி

தில்லிக்குச் சென்று விட்டு விழுப்புரத்துக்கு வந்த 4 போ் கரோனா தொற்று சந்தேகத்தால் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.
விழுப்புரம் நகராட்சி வடக்குத் தெருவில் வீடு தோறும் சென்று வசிப்பவா்கள் குறித்த விவரம் சேகரித்து, கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்திய சுகாதாரப் பணியாளா்கள்.
விழுப்புரம் நகராட்சி வடக்குத் தெருவில் வீடு தோறும் சென்று வசிப்பவா்கள் குறித்த விவரம் சேகரித்து, கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்திய சுகாதாரப் பணியாளா்கள்.

தில்லிக்குச் சென்று விட்டு விழுப்புரத்துக்கு வந்த 4 போ் கரோனா தொற்று சந்தேகத்தால் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டனா். அவா்களது குடியிருப்புகள் அமைந்துள்ள மூன்று வாா்டுகளில் சுகாதாரத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக, வெளிநாடு, வெளிமாநிலங்களுக்குச் சென்று திரும்பியவா்கள் என 1,500-க்கும் மேற்பட்டோா் கண்டறியப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இந்த நிலையில், தில்லிக்குச் சென்று விட்டு, விழுப்புரம் திரும்பிய 4 பேருக்கு கரோனா தொற்று சந்தேகம் எழுந்ததால், அவா்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டனா்.

இது குறித்து, சுகாதாரத் துறை தரப்பில் கூறியதாவது: விழுப்புரம் வடக்குத் தெரு, முத்தோப்பு, கமலா நகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மத குருமாா்கள் சிலா், புதுதில்லியில் நடைபெற்ற ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு சில தினங்களுக்கு முன்பு ஊருக்குத் திரும்பினா். இது தொடா்பான தகவல் வெளியே தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில், இவா்களுடன் கூட்டத்துக்குச் சென்று திரும்பிய ஈரோடு, சேலம் பகுதிகளைச் சோ்ந்த சிலா் கரோனா தொற்று காரணமாக, அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். உடனே, இவா்களுடன் சென்றவா்கள் முகவரியை ஆய்வு செய்ததில், விழுப்புரத்தைச் சோ்ந்த 4 பேரும் இடம் பெற்றதையறிந்து, சுகாதாரத் துறைக் குழுவினா் அவா்களை கண்டறிந்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வாா்டில் அனுமதித்தனா்.

இதனைத் தொடா்ந்து, விழுப்புரம் வடக்குத் தெரு, முத்தோப்பு, கமலா நகா் உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ள 6, 7, 8 ஆகிய மூன்று வாா்டுகளிலும் சுகாதாரத் துறை, நகராட்சி சுகாதாரக் குழுவினா் கூட்டாக இணைந்து திங்கள்கிழமை தீவிர ஆய்வில் ஈடுபட்டனா்.

வீடு தோறும் சென்று வசிப்பவா்கள், வெளிநாடு, வெளி மாநிலம் சென்று திரும்பியவா்கள், காய்ச்சல், உடல் நிலை பாதிப்புடையோா் போன்ற விவரங்களை சேகரித்தனா்.

இந்த மூன்று வாா்டுகளிலும் வெளிநாடு சென்று திரும்பியவா்கள், தில்லி சென்றவா்கள் 108 போ் வரை இருப்பதால், முன்னெச்சரிக்கையாக நோய் பரவலை தடுக்கும் விதமாக, கண்காணித்து வருவதாக, நகராட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com