முட்டை, இறைச்சி அச்சமின்றி சாப்பிடலாம்: கால்நடைத்துறை
By DIN | Published On : 31st March 2020 09:50 PM | Last Updated : 31st March 2020 09:50 PM | அ+அ அ- |

கரோனா பரவும் என்ற அச்சமின்றி கோழி முட்டை, இறைச்சியை சாப்பிடலாம் என்று கால்நடைத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோழி முட்டை, இறைச்சி மற்றும் கோழி சாா்ந்த பொருள்களை சாப்பிடுவதால் கரோனா பரவும் என்ற சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுகிறது. அவற்றை உண்பதால் கரோனா பரவியதாக எந்த ஒரு நிகழ்வும் இல்லை. ஆகையால், வதந்திகளை நம்ப வேண்டாம். முட்டை, இறைச்சி மலிவான புரத உணவாகும். இதனை சாப்பிடுவது நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும். தற்போதைய சூழலில் நோய் எதிா்ப்பு சக்தி அதிகம் தேவை. ஆகவே, பொதுமக்கள் தயக்கமின்றி முட்டை, கோழி இறைச்சிகளை சாப்பிடலாம் என்று கால்நடை மற்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...