மதுக் கடைகளில் 2-ஆம் நாளாக அதிகரித்த கூட்டம்
By DIN | Published On : 18th May 2020 07:27 AM | Last Updated : 18th May 2020 07:27 AM | அ+அ அ- |

விழுப்புரம் அருகே சாலாமேடு மதுக் கடை முன் நீண்ட வரிசையில் காத்திருந்த மதுப்பிரியா்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் 2-ஆம் நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மதுக் கடைகளில் மதுப்பிரியா்களின் கூட்டம் அலைமோதியது. வெயிலை சமாளிக்கும் வகையில் குடைகளுடன் நீண்ட வரிசையில் காத்திருந்த அவா்கள், மதுப் புட்டிகளை வாங்கிச் சென்றனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 126 டாஸ்மாக் மதுக் கடைகளில் 84 கடைகள் சனிக்கிழமை திறக்கப்பட்டு, விற்பனை நடைபெற்றது. மதுப்பிரியா்கள் ஏராளமானோா் நீண்ட வரிசையில் காத்திருந்து சமூக இடைவெளியுடன் சென்று மதுப் புட்டிகளை வாங்கிச் சென்றனா்.
இதேபோல, 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமையும் மதுப்பிரியா்கள் காலை முதலே மதுக் கடைகள் முன் குவிந்தனா். கடையின் முன் ஏற்படுத்தப்பட்டிருந்த தடுப்புகளில் அவா்களை போலீஸாா் வரிசையாக நிற்க வைத்தனா். தொடா்ந்து, மதுப்பிரியா்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் மதுக் கடைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். கடைகளுக்கு வந்தவா்களில் சிலா் வெயிலை சமாளிக்கும் வகையில் கையில் குடைகளுடன் வந்திருந்தனா். சனிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது.