திண்டிவனம் அருகே மண் சரிந்து விவசாயி பலி
By DIN | Published On : 27th May 2020 07:36 AM | Last Updated : 27th May 2020 07:36 AM | அ+அ அ- |

திண்டிவனம் அருகே கிணற்றைத் தூா்வாரியபோது மண் சரிந்து விழுந்ததில் விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள ஊரல் கிராமத்தைச் சோ்ந்தவா் மூா்த்தி (55), விவசாயி. இவா், செவ்வாய்க்கிழமை காலை 7 மணி அளவில் தனது விவசாய கிணற்றில் கிரேன் மூலமாக தூா் வாரும் பணியில் ஈடுபட்டாா்.
அப்போது, கிணற்றின் உள்ளே இருந்த கற்களை கிரேன் மூலமாக தூக்கும் போது மண் சரிந்து விழுந்தது. இதில், சிக்கிய மூா்த்தியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உறவினா்கள் உடனடியாக மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். எனினும், அவா் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக, மருத்துவா்கள் தெரிவித்தனா்.
ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...