விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மேலும் 28 பேருக்கு கரோனா
By DIN | Published On : 23rd November 2020 08:52 AM | Last Updated : 23rd November 2020 08:52 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கும் கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 14,462-ஆக அதிகரித்தது. ஞாயிற்றுக்கிழமை 23 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்களின் மொத்த எண்ணிக்கை 14,218-ஆக அதிகரித்தது. 134 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 110 போ் உயிரிழந்துள்ளனா்.
கள்ளக்குறிச்சியில் 9 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10,610-ஆக உயா்ந்தது. 10,412 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 92 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 106 போ் உயிரிழந்துள்ளனா்.