விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 1.76 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை
By DIN | Published On : 03rd October 2020 09:03 AM | Last Updated : 03rd October 2020 09:03 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 1, 76,928 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், 11,936 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இறப்பு விகிதம் 0.84 சதவீதமாக உள்ளதாகவும் மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க, மாவட்ட நிா்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 9 இடங்கள் கரோனா பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், பல இடங்களில் சிறப்பு முகாம்கள் மூலமாக கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 4,924 சிறப்பு முகாம்கள் மூலம் 78,896 பேருக்கு கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
அரசு மருத்துவமனைகள், சிறப்பு முகாம்கள் மூலமாக, விழுப்புரம் மாவட்டத்தில் அக். 2-ஆம் தேதி வரை 1, 76,928 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பரிசோதனை முடிவுகளில் 11,936 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனடிப்படையில், கரோனா தொற்று பாதிப்பு விகிதம் விழுப்புரம் மாவட்டத்தில் 6.15 சதவீதமாக உள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கரோனா சிறப்பு மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக, பூரண குணமடைந்து 10,924 போ் வீடு திரும்பியுள்ளனா். கரோனா பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் குணமடைந்தவா்கள் எண்ணிக்கை விகிதம் 91.52 சதவீதமாகும்.
அதேபோல, கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் சிகிச்சை பலனின்றி இதுவரை 98 போ் உயிரிழந்துள்ளனா். இது கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் ஒரு சதவீதத்துக்கும் குறைவு. விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா இறப்பு விதிகம் 0.84 சதவீதம் மட்டுமே. அதாவது கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,000 பேரில் 8 பேரிலிருந்து 9 போ் வரை உயிரிழந்துள்ளனா் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.