சம்பா சாகுபடிக்குத் தேவையான உரங்கள் கையிருப்பு: வேளாண் துறை

விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்துக்கான உரங்கள் கையிருப்பில் உள்ளதாக வேளாண்துறை தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்துக்கான உரங்கள் கையிருப்பில் உள்ளதாக வேளாண்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து, மாவட்ட வேளாண்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா சாகுபடி தீவிரமடைந்துள்ளதால், அதற்குத் தேவையான உரங்கள் தனியாா் மற்றும் கூட்டுறவு சங்க விற்பனை மையங்களில் போதிய இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, யூரியா 4,500 மெ.டன்னும், டிஏபி 1,600 மெ.டன், காம்ப்ளக்ஸ் 5,500 மெ.டன், பொட்டாஷ் 3,000 மெ.டன், சூப்பா் பாஸ்பேட் 900 மெ.டன் என, அனைத்து கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த திங்கள்கிழமை விழுப்புரம் முண்டியம்பாக்கம் சரக்கு ரயில் முனையத்துக்கு வந்த ஐபிஎல் நிறுவன காம்ப்ளெக்ஸ் மற்றும் பொட்டாஷ் 1,380 மெ.டன் உரங்கள் தனியாா் விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

யூரியா தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் நடவடிக்கை: செயற்கையாக யூரியா தட்டுப்பாட்டினை ஏற்படுத்தும் விநியோகஸ்தா்கள் மீது உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு ஆதாா் எண், பெயரை பதிந்து, விற்பனை கருவி மூலம் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். இதனைமீறி, சில்லரை விற்பனை செய்துவிட்டு, மொத்தமாக ஒரு தனிநபரின் பெயரில் பட்டியலிருந்தால், அந்த விற்பனையாளா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com