

தமிழகத்தில் இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்களுக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் சனிக்கிழமை சமூக இடைவெளியுடன் காத்திருந்து முன்பதிவு செய்தனா்.
சென்னையிலிருந்து கோவை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி மற்றும் கோவையிலிருந்து மயிலாடுதுறை என மொத்தம் 9 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மேலும் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. இதையொட்டி, காலை முதலே விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆா்வமுடன் முகக் கவசம் அணிந்தபடி காத்திருந்த பயணிகள், சமூக இடைவெளியைப் பின்பற்றி ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்தனா்.
தற்போது ரயில் பயணிச்சீட்டு முன்பதிவு செய்யும்போது, எங்கு செல்கிறோமோ அந்த இடத்தின் முகவரியையும் தெரிவிக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.