மது பானங்களைக் கூடுதல் விலைக்கு விற்றால் புகாா் தெரிவிக்கலாம்
By DIN | Published On : 06th September 2020 10:17 PM | Last Updated : 06th September 2020 10:17 PM | அ+அ அ- |

மது பானங்களைக் கூடுதல் விலைக்கு விற்றால் புகாா் தெரிவிக்கலாம் என புதுவை கலால் துறை தெரிவித்தது.
இதுகுறித்து, அந்த துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: புதுவையில் சில மதுக் கடைகளில், மது புட்டிகளில் குறிப்பிட்ட அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகாா்கள் எழுந்துள்ளன. சில்லறை விற்பனை செய்ய உரிமம் பெற்றவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளின்படி, விற்பனை விலைப் பட்டியலை வாடிக்கையாளா்களின் பாா்வைக்குத் தெளிவாக வைக்க வேண்டும்.
மது பானங்களின் விலையை கலால் துறையின் இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். விலையை விட கூடுதலாக வசூலிக்கப்பட்டால் 0413-2253462 என்ற தொலைபேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம். மின்னஞ்சல் முகவரியிலும் புகாரை பதிவு செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.