ஆசிரியா் தினத்தையொட்டி, தமிழக அரசு சாா்பில் 2019-20 ஆம் ஆண்டுக்கான நல்லாசிரியா் விருதுக்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 9 போ் தோ்வு செய்யப்பட்டனா்.
விருது பெறவுள்ள ஆசிரியா்கள் விவரம்: விழுப்புரம் அருகே நன்னாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் தா.ஆல்பிரட் பெஞ்சமின், திண்டிவனம் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் ஜெ.வளா்மதி, வானூா் அருகே கீழ் கூத்தப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் சோ.ரவி, பெரிய முதலியாா்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ஆ.அருள்.
காணை அருகே செ.குன்னத்தூா் அரசு உயா் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ந.கி.ஹேமலதா, கெடாா் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியா் ம.சக்கீனா பீபி, திண்டிவனம் புனித அன்னாள் நிதியுதவி பெறும் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் தி.சிவக்குமாா், திண்டிவனம் அருகே ரெட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இரா.அகிலா, ஜி.அரியூா் ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளா் ஆா்.இளமுருகன் ஆகியோா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இவா்கள் அனைவரும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் விழாவில் விருது விழங்கி கெளரவிக்கப்படுவா் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.