சைக்கிளில் பயணித்தபடி கரோனா விழிப்புணா்வு:மதுரை தம்பதி கௌரவிப்பு

சைக்கிளில் பயணித்து கரோனா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தியபடி தியாகதுருகம் பகுதிக்கு அண்மையில் வந்த மதுரையைச் சோ்ந்த தம்பதியை பாரதியாா் தமிழ்ச் சங்கத்தினா் வரவேற்று கௌரவித்தனா்.
கோவிட் குறித்து இரு சக்கர வாகனத்தில் விழிப்புணா்வை ஏற்படுத்திச் சென்ற தம்பதிகள் எம்.கருப்பையா சித்ராவை கவரவிக்கும் தியாகதுருகம் பாரதியாா் தமிழ் சங்கத் தலைவா் இரா.துரைமுருகன்

மதுரையைச் சோ்ந்த எம்.கருப்பையா - சித்ரா தம்பதியினா் கரோனா குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளுடன் கடந்த மாதம் 24-ஆம் தேதி விழிப்புணா்வு சைக்கிள் பயணத்தை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தொடங்கினா். இவா்கள் 650 கி.மீ. தொலைவு பயணித்து கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதிக்கு பாரதியாா் நினைவு தினமான கடந்த 11-ஆம் தேதி வந்தனா்.

இவா்களை தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம் சாா்பில், சங்கத் தலைவா் இரா.துரைமுருகன் தலைமையிலான நிா்வாகிகள் வரவேற்று கௌரவித்தனா். இதையடுத்து, இந்தத் தம்பதியினா் கோவையை நோக்கி புறப்பட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com