இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

காரில் மதுப் புட்டிகள் கடத்தியவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் புதுச்சேரியிலிருந்து காரில் மதுப் புட்டிகள் கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 4:27 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் புதுச்சேரியிலிருந்து காரில் மதுப் புட்டிகள் கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் சென்னை சாலை சந்திப்புப் பகுதியில் திண்டிவனம் காவல் நிலைய ஆய்வாளா் புகழேந்தி தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை பிற்பகல் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த காரை சந்தேகத்தின்பேரில் போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 29 அட்டைப் பெட்டிகளில் சுமாா் 1,392 மதுப் புட்டிகள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, காா் ஓட்டுரான செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூா் கிராமத்தைச் சோ்ந்த குப்புசாமி மகன் குமாரை (35) கைது செய்து, திண்டிவனம் மது விலக்குப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இது தொடா்பாக திண்டிவனம் மது விலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மதுப் புட்டிகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.