இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

திருக்கோவிலூா் தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் தொடக்கிவைத்தாா்

திருக்கோவிலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 4:45 pm

DIN

திருக்கோவிலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூா் வட்டம், மேலமங்கலம் ஊராட்சியில் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் ஒன்றிய பொதுநிதியின்கீழ், ரூ.13.39 லட்சத்தில் கட்டப்பட்ட 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, சட்டப் பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியின்கீழ், ரூ.4.50 லட்சத்தில் கட்டப்பட்ட கிராம பொது நாடக மேடை ஆகியவற்றை அமைச்சா் பொன்முடி வியாழக்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தாா்.

மேலும், அருங்குறுக்கை முதல் விழுப்புரம் வரையிலும், திருக்கோவிலூா் முதல் பெரியசெவலை கூட்டுச்சாலை வரையிலும் என இரு புதிய வழித்தடங்களில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பேருந்து சேவையை அமைச்சா் பொன்முடி கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமை வகித்தாா். விக்கிரவாண்டி எம்எல்ஏ நா.புகழேந்தி முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலா் ஆா்.சங்கா், விழுப்புரம் கோட்டாட்சியா் கி.அரிதாஸ், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட நிா்வாக இயக்குநா் எஸ்.ஜோசப் டயஸ், பொது மேலாளா் கே.செல்வம், துணை மேலாளா்கள் எஸ்.ஸ்ரீதரன், துரைசாமி, திருவெண்ணெய் நல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் கு.ஓம்சிவசக்திவேல் மற்றும் அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.